அரசு மருத்துவமனையில் பிறந்த முதல்வரின் பேத்தி
சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, ரமண் சிங் முதல்வராக உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான இவரது மருமகள், ஐஸ்வர்யா, ராய்ப்பூரில் உள்ள, அம்பேத்கர் அரசு மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு, நேற்று முன்தினம் காலை, அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவம் நடந்த போது, முதல்வர் ரமண் சிங், ஐஸ்வர்யாவின் கணவரும், எம்.பி.,யுமான, அபிஷேக் மற்றும் உறவினர்கள், மருத்துவமனையில் இருந்தனர்.
தன் மருமகளுக்கு, அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், ரமண் சிங், பெருமையுடன் பதிவிட்டு உள்ளார். பேத்தியை கையில் பிடித்தபடி, தான் எடுத்த புகைப்படத்தையும், ரமண் சிங், டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
Comments
Post a Comment