இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?

சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது லட்சுமி என்ற குறும்படம். இயக்குநர் கவுதம் மேனனின் யூடியூப் சேனல்களில் ஒன்றான என்டெர்டெயின்மென்டில் வெளியிடப்பட்டதுதான் லட்சுமி குறும்படம். கள்ளக்காதல்தான் கதையின் மையக்கரு. ஆனால் அதை நியாயம் கற்பிக்கும் காட்சிகளை இயக்குநர் சர்ஜன் செய்திருந்தார். அன்றாடம் ஒரே மாதிரி வேலை பார்த்து சலித்துப்போகும் பெண் ஒருவர், வடிகால் தேடி வேறு ஆடவன் வீட்டிற்கு சென்று அன்றே அவனிடம் தன்னை பறி கொடுப்பதே கதை.

பிளாக் அன்டு
ஒயிட்டு இந்த கதையில் இரு வகைகளாக காட்சிகள் காட்டப்பட்டிருக்கிறது. லட்சுமி தனது கணவனோடு பேசும் கால கட்டம், குழந்தையை பள்ளிக்கு கிளப்பும் பகுதி போன்றவை பிளாக் அன்டு ஒயிட்டிலும், கள்ளக்காதலனுடன் பழகும் காட்சிகள் வண்ணமயமாகவும் உள்ளது.
பொதுவான பார்வை
லட்சுமி கள்ளக்காதலுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருப்பதால், அது வண்மயமாக காட்டப்படுவதாகவும், பிளாக் அன்டு ஒயிட் காட்சிகள் லட்சுமி கதாப்பாத்திரத்தின் எரிச்சல் வெளிப்பாடு எனவும்தான் பெரும்பாலான பார்வையாளர்கள் நினைத்திருப்பார்கள்.
மாற்றியோசிங்க மக்கா 
ஆனால் இந்த குறும்படத்தை மாற்றியும் யோசிக்கலாம் என்கிறார்கள் 'விவரமானவர்கள்'. பிளாக் அன்டு ஒயிட்டில் காட்டப்படுபவைதான் நிகழ்காலத்தில் நடப்பவையாம். கலராக தெரிவது கடந்த காலமாம். வழக்கமாக இயக்குநர்கள் பிளாஸ்பேக்கைதான் வண்ணமில்லாமல் காட்டுவார்கள். ஆனால் இந்த இயக்குநர் அப்படியே மாற்றிப்போட்டு காட்டியுள்ளாராம். பலருக்கும் கடந்த காலம்தான் இனிமையாக இருக்கிறது, அதை நினைத்து பார்க்க விரும்புகிறார்கள் என்பதால் இந்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

லட்சுமியின் காதல் 
இன்னொருமுறை லட்சுமி குறும்படத்தை பார்க்க நேர்ந்தால் கவனியுங்கள். லட்சுமியின் கணவன் தனது கள்ளக்காதலியிடம் போனில் பேசும் காட்சிக்கு பிறகு படுக்கையில் கிடந்தபடி லட்சுமி நினைத்து பார்ப்பதை போல ஒரு காட்சி வரும். அதில் ஆயிரம் தடவை சுற்றும் கிரைண்டர் போல அலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு செய்யனும் என்று தோணாது என்று லட்சுமி கூறுவார். அதன்பிறகு அவர் ரயிலில் பயணிப்பது, அங்கு கள்ளக்காதலன் பழக்கமாவது என காட்சி விரிவடையும்.
திருந்திட்டாருப்பா 
கணவன் தப்பு செய்வதை கண்டுபிடித்ததும், தானும் முன்பு தப்பு செய்துள்ளோம் என்பதை லட்சுமி நினைத்து பார்ப்பதை போல காட்சி காட்டப்பட்டுள்ளது. எனவே கள்ளக்காதலன் எபிசோடு பிளாஸ் பேக் என்கிறார்கள் சில நெட்டிசன்கள். மேலும், கிளைமேக்ஸ் காட்சியில், லட்சுமி தனது கணவரிடம், இனிமேல் கொஞ்ச நாள் பஸ்சில்தான் செல்வேன் என்று கூறுகிறார். கள்ளக்காதலனை அவாய்ட் செய்வதற்காகவே அவர் பஸ்சில் செல்வதாக கூறுகிறார். எனவே அது நிகழ்காலம்தானே, அது கறுப்பு வெள்ளையில்தானே காட்டப்படுகிறது என்று சொல்கிறார்கள் திரைப்பட துறையினர். இப்போ, லட்சுமி 'லைட்டா' நல்லவளாக தெரிகிறாள் அல்லவா?





Comments

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?