இறக்கி விடச் சொல்லி கதறிய தாய்; பிடிவாதமாக காருடன் இழுத்துச் சென்ற போலீசார்!
விதிமுறைகளை மீறியதாக, தாய் மற்றும் குழந்தையுடன் காரை இழுத்துச் சென்ற போலீசார் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மாலட் நகர் எஸ்.வி சாலையில் சாலையோரம் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் ஜோதி மாலே என்ற பெண், தனது குழந்தையுடன் அமர்ந்திருந்தார்.
இந்நிலையில் அங்கு வந்த போலீசார், விதிமுறைகளை மீறியதாக கூறி, காரை மீட்பு வாகனம் மூலம் போலீசார் இழுத்துச் சென்றனர். அப்போது அப்பெண், தனது 7 மாத குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார்.
காரை இழுப்பதை நிறுத்துமாறு அப்பெண் கூறியும், போலீசார் கேட்கவில்லை. மேலும் தனக்கும், குழந்தைக்கும் உடல்நலமில்லை என்றும், அதற்கான மருந்து சீட்டுகளை காண்பித்த போதும் கண்டுகொள்ளவில்லை.
Comments
Post a Comment