ஷிப்ட் முடிந்ததால் பாதிவழியில் விமானத்தை விட்டுச்சென்ற ஏர்இந்தியா விமானி!
லக்னோவிலிருந்து ஜெய்ப்பூர் வழியாக டெல்லிக்கு சென்ற ஏர்இந்தியா விமானம், பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயணிகள் டெல்லிக்கு பேருந்தில் அனுப்பப்பட்டனர்.
லக்னோவிலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லிக்குச் செல்லும் வழியில் ஜெய்ப்பூரில் நிறுத்தப்பட்டது. டெல்லியில் நிலவும் புகைமூட்டம் காரணமாக 9 மணிக்கு ஜெய்ப்பூர் செல்ல வேண்டிய விமானம் 1 மணிக்கு சென்றடைந்தது.
அங்கிருந்து 2 மணிக்கு டெல்லி புறப்பட வேண்டிய நிலையில், விமானத்தை இயக்கிய விமானியின் வேலை நேரம் முடிந்ததால், அவர் விமானத்தை அங்கேயே நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
மீண்டும் அங்கிருந்து விமானத்தை இயக்க விமானிகள் இல்லாததால், பயணிகளை பேருந்தில் ஏர் இந்தியா நிர்வாகிகள் டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் பயணிகளை மிகவும் கோபமடையச் செய்தது.
Comments
Post a Comment