காதலனை பற்றி மனந்திறந்த நமீதா.!



நடிகை நமீதா தனது காதலரான வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமாவின் கிளாமர் குயினாக விளங்கிய நமீதா சமீப காலங்களில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களுக்கு விருந்து படைத்த நமீதா அதன்பின் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் என்று ரசிகர்கள் தெரியாமல் இருந்தனர். இந்த நிலையில் தான் நமீதாவுக்கும், மூத்த நடிகரான சரத்பாபுவுக்கும் கல்யாணம் என்ற வதந்தி கோலிவுட்டில் சலசலக்க தொடங்கியது. அதன் பின் சம்பந்தப்பட்ட இருவரும் அதை மறுத்து அறிக்கை வெளியிட்டனர்.


இந்த நிலையில் நடிகை நமீதா, வரும் நவம்பர் 24ஆம் தேதி தனது காதலர் வீராவை கரம்பிடிக்க இருப்பதாக அறிவித்தார். இதுகுறித்து நடிகை நமீதா கூறியதாவது;


வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன். இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன்.

இவ்வாறு நடிகை நமீதா தனது காதல் பற்றிய பல சுவாரசியமாக தகவல்களை கோலிவுட்டில் கசிய விட்டு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?