ஜூலிக்கு திருமணம் – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரி போடும்..!



பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரவுக்கு ஜூலி நூல் விட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் அது பலிக்கவில்லை.

தற்போது ஜூலி விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சனை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.அதாவது விஜய் டிவி சார்பில் பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ரக்சனும் கலந்து கொண்டார்.அதே போல ஜூலியும் கலந்து கொண்டார். அப்போது அதில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை பரிமாறி கொண்டனர்.அதே போல ஜூலியும், ரக்சனும் நம்பர்களை பரிமாறி கொண்டனர். அதன்பிறகு இருவரும் செல்போனில் கடலை போட்டுள்ளனர்.
அதோடு பீனிக்ஸ் மால் போன்ற இடங்களுக்கு ஒன்றாக சுற்றியதை சிலர் பார்த்துள்ளனர்.ஜூலிக்காக ரக்சன் சில தொலைக்காட்சிகளை தொடர்பு கொண்டு வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் கலைஞர் டிவியில் வாய்ப்பு கிடைத்ததும் முதலில் அந்த விஷயத்தை ரக்சனிடம் தான் ஜூலி கூறினாராம்.
அதுமட்டும் அல்லாமல் ஜூலிக்கு ரக்சன் சிறிய மோதிரம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளாராம்.அந்த மோதிரம் தற்போது அவரது கையில் உள்ளதாகவும் தெரிகிறது. அதோடு ஜூலி விரைவில் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.அது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியாக இருந்தாலும் இருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து இருதரப்பு நெருக்கமானவர்கள் கூறும்போது நெருப்பு இல்லாமல் புகையாது என்றும் கூறுகின்றனர்.

Comments

Popular posts from this blog

How really Cyber Expo scammed me!! Please don't fall for this..

ஹீரோயினை பார்த்து பயந்த நடிகர் விஜய்?

இது தெரியாம லட்சுமிய கெட்டவள்னு நெனைச்சிட்டீங்களே.. படத்திலுள்ள இந்த குறியீட்டை கவனிச்சீங்களா?