உண்மையை கூறியதற்கு தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார்: கமல்ஹாசன்
இந்துத்துவா குறித்து உண்மையை கூறியதற்கு தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தியாகராயநகரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,
இந்து தீவிரவாதம் தொடர்பான கருத்துக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உண்மையாக எதிர்கொள்வேன். இந்துத்துவா தொடர்பாக உண்மையை கூறியதற்கு தண்டனை அளித்தால் அதனை அனுபவிக்கவும் தயார். என்னை இந்துமத விரோதி என்று தற்போதும் விமர்சிக்கின்றனர். நான் இந்துமத விரோதி இல்லை. இந்துக்களை புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. எந்த மதமானாலும், எவரானாலும் வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பது எனது உரத்த குரல்.
நான் பிறந்தது, பாலச்சந்தர் என்னை அறிமுகப்படுத்தியது தவிர பிராமண சமூதாயத்தை நான் தேடிப்போனதே கிடையாது. எல்லா சமுதாயத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். சமூகம் பார்த்து நட்பு கொள்வது கிடையாது. இந்து விரோதி என்று சித்தரிக்கப்படுகிறேன். நான் பிறந்த குலத்தில் இருந்து விலகி வந்தவன். என்னை இப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள். நாத்திகன் என்று என்னை அழைப்பதை ஏற்கவில்லை; பகுத்தறிவாளன் என்பதையே விரும்புகிறேன்.
என்னுடன் இருப்பவர்கள் தவறு செய்தால், ஊழல் செய்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன். ஏற்கனவே தவறு செய்தவர்கள் என்னுடன் நிச்சயமாக வர முடியாது. அரசியலுக்கு வந்துவிட்டேன் என்பதை சொல்லிவிட்டேன். எனக்கு பின்னால் வருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments
Post a Comment